தேர்வுக்குழுவிற்கு பல லட்சம் ரொக்கப்பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!!

கடந்த சில வருடங்களாக இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக ஆடி

By Fahad | Published: Apr 08 2020 08:36 AM

கடந்த சில வருடங்களாக இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக ஆடி எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை, அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த அணியை தேர்வு செய்த இந்திய தேர்வுக் குழுவிற்கு பிசிசிஐ ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு எம் எஸ் கே எம் பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு தலா ஒவ்வொருவருக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.