சரியான புரிதல் இல்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது.! சமத்துவ மக்கள் கட்சி தலைவர் பேச்சு.!

  • சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது.
  • மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டர்கள் என போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்கிறது என கூறினார். பின்னர் நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது என  தெரிவித்துள்ளார்.

இந்த திருத்த மசோதா சட்டம் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் யூகங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு கலவரம் வெடிக்கிறது. புரிதல் இல்லாத காரணத்தினால் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர். சட்ட திருத்தம் குறித்து மாணவர்களும் தெரிந்துகொண்டு புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே இது போன்ற போராட்டங்கள் அதிகம் நடத்தப்படுகிறது. வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்கலாம் என்று அங்குள்ள எதிர்கட்சிகள் செயல்படுகின்றன என கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்