5 விக்கெட்டை வீழ்த்திய பட்டியலில் பங்களாதேஷ் அணி இடம் பிடித்தது !

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  200 ரன்கள் மட்டுமே  எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டை பறித்து சாதனை படைத்து உள்ளார். இந்நிலையில் இதுவரை நடந்த உலகக் கோப்பையில்  ஆஸ்திரேலியா அணியை சார்ந்த வீரர்கள் 14 முறை 5 விக்கெட்டை வீழ்த்தி முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது.
தற்போது அந்த பட்டியலில்  பங்களாதேஷ் அணி முதன் முறையாக இடம் பிடித்து உள்ளது.
ஆஸ்திரேலியா – 14
பாகிஸ்தான் – 8
சவுத்தாஃப்ரிகா – 7
மேற்கிந்திய தீவுகள் – 6
இந்தியா – 5
நியூசிலாந்து – 5
ஸ்ரீலங்கா – 4
இங்கிலாந்து – 3
பங்களாதேஷ் – 1 *

author avatar
murugan