இனி இனிப்பு பானங்களுக்கு விளம்பரம் செய்ய தடை..!

உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை

By murugan | Published: Oct 11, 2019 11:38 AM

உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை  விளம்பரங்கள் , பத்திரிகை , இணையதளம் , வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரம் படுத்துவதால் விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டு அதை சாப்பிடுகின்றார்.இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக , சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் அதிக இனிப்பு கொண்ட பானங்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc