கூகுள் ஏன் இப்படியெல்லாம் பண்ணுது! அதிர்ச்சி தரும் கூகுள் சேர்ச்...

கூகுள் ஏன் இப்படியெல்லாம் பண்ணுது! அதிர்ச்சி தரும் கூகுள் சேர்ச்...

கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தவறான சேர்ச் கூகுள் தேடுபொறியில் "bad chief minister" என தேடினால் அதற்கான விடை கேரளத்தின் தற்போதைய முதல்வரான பினராயி விஜயன் அவர்களை குறிப்பதாக உள்ளது. அத்துடன் அவரை பற்றிய முழு விவரமும் இதில் இடம் பெற்றுள்ளது. பதில்! மற்ற மாநிலங்களை விட பல விதத்தில் சிறப்பான பணியை தான் இவர் கேரளத்திற்கு தந்து வருகிறார் என்பது பலரும் அறிந்த உண்மை. அப்படி இருக்கையில் இவ்வாறு ஒருவரை கூகுள் சர்ச்சில் காண்பிப்பது தவறான ஒன்றாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதை பற்றி ஒரு வார்த்தை கூட கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் சிலர் கேரளத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் தான் இப்படிப்பட்ட தவறான புரிதலை இந்த வகை தொழிற்நுட்பங்கள் ஏற்படுத்துகின்றன என தெரிவிக்கின்றனர். எதுவாக இருந்தாலும், இதற்கு சரியான விளக்கத்தை கூகுள் நிறுவனம் தான் தர இயலும்.

Latest Posts

சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!
இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாளை பிரதமர் உரை..!
#IPL2020: பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத்.. 127 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!
#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!
ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்!
பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!
#IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது!
#IPL2020: டக் அவுட் ஆன ரஹானே.. 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி!