பிக்பாஸ் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

  • பாடகி என்.எஸ்.கே ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது. 
  • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

பாடகி என்.எஸ்.கே ரம்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் நடிகர் சத்யாவை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.