வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்!சில நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்பிணி பெண்!

வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த தகராறில் கணவனை தாக்கிய சகோதர்கள்.பின்னர்

By sulai | Published: Jan 08, 2020 03:48 PM

  • வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த தகராறில் கணவனை தாக்கிய சகோதர்கள்.பின்னர் இரண்டு வீட்டினரும் சமாதானம் அடைந்துள்ளனர்.
  • பின்னர் சில நாட்கள் கழித்து ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரா மங்கலத்தில் வசித்து வந்தவர் ஜெய ஸ்ரீ ஆவார்.இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அருண் ராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாற இரு வீட்டினரின் சம்மதத்துடன் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் 5 மாதங்களில் ஜெய ஸ்ரீ கர்ப்பமான நிலையில் வளைகாப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது வளைகாப்பு நிகழ்ச்சியில் அருண்ராஜ் வீட்டினர் ஜெய ஸ்ரீக்கு தங்க வளையல் போடுமாறு கூறியுள்ளனர்.ஆனால் நிகழ்ச்சியில் வளையல் போடாமல் இருந்ததால் இரண்டு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெய ஸ்ரீ-ன் சகோதரர்கள் அருண்ராஜை தாக்கியுள்ளனர்.பின்னர் இரண்டு வீட்டினரும் சமாதானம் ஆன நிலையில் அருண் ராஜ் வீட்டினர் ஜெய ஸ்ரீ -யை புதுவைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் வீட்டினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதன் அடிப்படையில் ஜெய ஸ்ரீ-ன் வீட்டினர் அருண்ராஜ் வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு ஜெய ஸ்ரீ சடலமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழத்தொடங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் ஜெய ஸ்ரீ-ன் சடலத்தை மீட்டுள்ளனர்.பின்னர் ஜெய ஸ்ரீ-ன் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc