அயோத்தி தீர்ப்பு ! நீதித்துறையில் பதித்த முத்திரை - பொன் ராதாகிருஷ்ண‌ன்

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் இது குறித்து கூறுகையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை.யாருக்கும் பாதகமின்றி, அனைவராலும் வரவேற்கப்படும் இந்த தீர்ப்பு மனதுக்கு நிறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.