அயோத்தி தீர்ப்பும்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்களும்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், இன்னும் 3 மாதங்களில் அங்கு கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்புக்கு அவர்கள் ஏற்கும் வகையிலான 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இது குறித்து பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ அயோத்தி தீர்ப்பை அணைத்து தரப்பு மக்களும் ஓரே சிந்தனை, மதநல்லிணக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘அனைவரும் தாங்கள் வணங்கும் கடவுளின் பெயரால் அயோத்தி தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ என கருத்து தெரிவித்தார்.
தமிழக பாஜக மூத்த  தலைவர் இல.கணேசன், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.’ என தெரிவித்தார்.
அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ‘உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே மக்கள் கருத வேண்டும்.’ தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ‘ மனக்கசப்பு நீங்கி தீர்ப்பு மூலம் புதிய தொடக்கம் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.