“அயோத்தி வழக்கை மாற்ற தேவையில்லை” உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுதில்லி,

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள பாபர் மசூதிஇடிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Image result for அயோத்தி வழக்கைஇந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் வியாழனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் உத்தரவிட்டு மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். மூன்றாவது நீதிபதியான சிக்ரியின் தீர்ப்பு முதல் இருவரது கருத்துகளில் இருந்து சற்றே மாறுபட்டு தனியாக வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி பிரதான வழக்கு அக்டோபர் 29 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment