விழிபிதுங்கும் நிற்கும் இங்கிலாந்து.! 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்.!

இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டுமே கொரோனாவால் 763 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 26,39,722 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,84,280 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

இத கொரோனா வைரஸானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்து வருகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இங்கிலாந்தில் இதுவரை 1,33,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,100 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில், நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 763 பேர் உயிரிழந்தததால் அந்நாட்டு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.