வந்தது பிஎஸ்6 ரக பைக்குகள்… அறிமுகப்படுத்திய ஹோண்டா நிறுவனம்.. அசத்தும் அதன் சிறப்பம்சங்கள்..

  • இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முடி சூடாத ராஜாவாக  விளங்கும் ஹோண்டா தற்போது புதிய மாடல்களை களமிறக்கியுள்ளது.
  • இதன் விபரம் குறித்த தினச்சுவடின் தொகுப்பு.

ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக  ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில்,  வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து  மாசுக்கட்டுபாட்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே, இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஹோண்டா எஸ்பி 125 ரக வாகனத்தின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது. இதுவரை பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் மொத்தம் 60,000 வாகனங்க்கள் விற்பனையாகியுள்ளன.

வண்டியின் சிறப்பம்சம்:

  • இந்தியாவின் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான ஸ்கூட்டராக  இந்த ஆக்டிவா 125 உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • Image result for honda activa 125

இந்த வாகனத்தில்,

  • காம்பி பிரேக்கிங் சிஸ்டம்,
  • முழுமையான எல்இடி ஹெட்லைட்,
  • அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்,
  • பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையை திறக்கும் வசதியுடன் மல்டி பங்ஷன் சாவி இதன்  சிறப்பம்சம்.
  • இதன் ஆரம்ப விலை ரூ.67,490(எக்ஸ்ஷோரூம்).

ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் பிஎஸ்-6 மாடல்:

  • ஹோண்டா எஸ்பி 125 என்ற பெயரில் புதிதாக இந்த மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.
  • இதில், சத்தம் எழுப்பாமல் இயங்கும் ஸ்டார்ட்டர் மோட்டார்,
  • Image result for honda sp 125 bs6
  • மேலும் இந்த வண்டியில், 19 புதிய தொழில்நுட்பங்கள்,
  • அதிக மைலேஜ் வாடிக்கையாளர்களை கவரும்.
  • விலை ரூ.72,900 (எக்ஸ்ஷோரூம்).

புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்:

  • இது வரும், ஜனவரி 15ல் அறிமுகமாகிறது.
  • பிஎஸ்-6 தரத்திலான இன்ஜின்,
  • Image result for honda activa 6g
  • எல்இடி ஹெட்லைட்,
  • 12 இன்ச் அலாய் வீல்கள்,
  • முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்,
  • சத்தம் இல்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பம்,
  • காம்பி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.
  • எதிர்பார்க்கப்படும் விலை 60,000 முதல் 62,000 வரை (எக்ஸ்ஷோரூம்).
author avatar
Kaliraj