கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இறக்கப்போகிறது தனது டர்போ ரக காரை களத்தில்.. எதிர்பார்ப்பில் வாகன பிரியர்கள்...

Hyundai is about to unveil its turbocharged car in the car market.

  • கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிராண்ட் I 10 நியோஸ் டர்போ ரக கார் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வர உள்ளது.
  • இதன் வரவை கார் பிரியர்கள் கண் இமைக்காத எதிர்பார்ப்பு.
இந்த கார்,  டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டது. மேலும், இந்த கார் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இதன்  இன்டிரியரை பொறுத்தவரை கருப்பு நிறத்திலான இருக்கை கொடுக்கப்பட்டு சிவப்பு நிறத்திலான ஸ்டிச்சிங் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.. மேலும் இதில்,
  • பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  •  100 HP குதிரைத்திறன் மற்றும்
  • 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்
  • இதன்  என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
  • 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்
  • மேனுவல் கியர்பாக்ஸ்
  • இந்த மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வரவை கார் பிரியர்கள் சந்தையில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.