சரிவை சந்திக்கும் கார் நிறுவனங்கள் !10,00,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ?

தமிழகத்தில் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக  ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.இதன் விளைவாக ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

 

தொடர் விற்பனை  சரிவால்  கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான கார்கள் தேக்கம் அடைந்துள்ளது.இதனால் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது.இதன் விளைவாக பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு முறை அளிப்பது ,தற்காலிக பணியாளர்கள் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கூட்டமைப்பு  தரப்பில் கூறுகையில்,இதே நிலை நீடித்தால் 10 லட்சம் பணியாளர்களை வெளியேற்ற வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளது.