காவிரி விவகாரம்:இன்று பா.ம.க சார்பில் தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்!

பா.ம.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. சென்னை அம்பத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் நடைபெறும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் … Read more

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் பான் கார்டு விண்ணப்பத்தில் சேர்ப்பு!

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் நிரந்தர கணக்கு எண் அட்டையாள பான் கார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகளில் பான் கார்டு இல்லாத காரணத்தால் திருநங்கைகள் வருமான வரியை செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு அடையாளமாக ஆதார் கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பான் கார்டு இல்லாத காரணத்தால், திருநங்கைகளால் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பான் விண்ணப்பத்தில் ஆண், … Read more

சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் …!ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு……

நேற்று சிலி நாட்டின் மத்தியப் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பூமியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துறைமுக நகரமான கோகுயிம்போ ((Coquimbo)) பாதிக்கப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

IPL 2018:ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு…!780 பேர் கைது…!

ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகள் போராட்டக்களமாகக் காட்சியளித்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

கடன்மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக் ஷா சுப்ரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…!

சென்னை உயர்நீதிமன்றம்  கடன்மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக் ஷா சுப்ரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது. சுபிக் ஷா நிறுவனம், 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு 40 கோடி ரூபாய் வரை திருப்பி செலுத்தவில்லை என்றும், நிதி நிறுவனம் தொடங்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை 150 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் 13 வங்கிகளிடம் 750 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சுபிக் ஷா சுப்பிரமணியன் அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த … Read more

ஒருவழியாக களமிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி ….!பாஜக எம்பிக்களுடன் சேர்த்து உண்ணாவிரதம் …!

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாளை (ஏப்.12) உண்ணாவிரதம் கடைபிடிக்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது வழக்கமான பணிக்கு இடையே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். பாஜக எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை பேசும்போது, நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டினார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி பிரிவினை வாத அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய பிரதமர், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஏப்ரல் 12-ம் தேதி உண்ணாவிரதம் … Read more

அரசு திட்டங்களுக்கு தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரமோடி தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அரசு திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுவதாக  குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் மோதிஹரி (motihari) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஊழல், சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நிதிஷ்குமார் அரசு திறம்பட செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டரை லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளன என்று … Read more

உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது – தம்பிதுரை

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை  உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அது எப்போதும் நம்மைக் கைவிடாது என்றும் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கருப்பப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தமிழகம் வருவதை நாம் எதிர்க்கக்கூடாது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

HDFC வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது …!

எச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 20 அடிப்படை புள்ளிகள் வரை  உயர்த்தியுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.45 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.60 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 75 லட்ச ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டிலிருந்து 8.70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் வாடிக்கையாளர்களுக்கு … Read more

IPL 2018:இதுவரை ஐபிஎல்லில் அதிவேக அரை சதங்கள்…!யாரு டாப் இந்த பட்டியலில்?இதோ விவரம் …

அதிவேக அரைசதங்கள் ஐபில் கிரிக்கெட்டில்  சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபிஎல் அணியில் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கிழி கிழி என்று கிழித்தார். … Read more