ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறந்தநாளில் உண்ணாவிரதம்!வழியில்லாமல் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருந்த அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்காத நிலையில், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடு அவரது பிறந்தநாளான வெள்ளிக்கிழமை காலை முதல் … Read more

எஸ்.வி சேகர் பேச்சு சரியில்லை !என்ன இருந்தாலும் அவர் பேசுனதா ஏத்துக்கிட முடியாது !மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு  பதில் அளித்துள்ளார். பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசி இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு தற்போது பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில் ”பெண்களை இழிவுபடுத்தும் வகையில் … Read more

வித்தியாசமான ஆசிய விமான நிறுவனங்கள் !பயன்படுத்திய பழைய விமானங்களை வாங்க அதிக ஆர்வம் !

ஆசிய பிராந்தியத்தில் உள்ள விமான நிறுவனங்களிடையே , பயன்படுத்திய பழைய விமானங்களை வாங்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் ஆசிய நிறுவனங்கள் 61 பழைய விமானங்களை வாங்கிய நிலையில், 54 புதிய விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. குறைவான விலை முக்கிய காரணமாக இருந்தாலும், விரைவாக டெலிவரி கிடைப்பதும் பழைய விமானங்களை நாடுவதற்கான மற்றொரு காரணமாகும். புதிய விமானங்களை வாங்க சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் நிலையில், பழைய விமானங்களுக்கு சுமார் 250 … Read more

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம்!டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சு தேர்வு !

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று  புனேவில் நடைபெறும் 17வது ஆட்டத்தில் மோதுகின்றது. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ்,  எம்.எஸ். தோனி(கேப்டன்), டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா, கரன் … Read more

இந்திய முதலமைச்சர்களில் இவருதான் ஃபேஸ்புக்ல டாப்!எப்படி தெரியுமா ?

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு, இந்திய முதலமைச்சர்களில், அதிகம் பேரால் முகநூலில்(FACEBOOK) பின் தொடரப்படுபவர் என்ற சிறப்பு கிடைத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், டிசம்பர் 31ஆம் தேதி வரை, யோகி ஆதித்யநாத்தின் கருத்துகளை பகிர்ந்தவர்கள், கருத்து தெரிவித்தவர்கள், லைக் செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டதாக, பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரை 5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே, குஜராத்தின் விஜய் ரூபாணி ஆகியோர், முகநூலில் பிரபலமாக … Read more

உங்கள் குடும்ப அட்டையில் ஏதேனும் பிழைகள் உள்ளதா?இதோ உங்களுக்கான வாய்ப்பு!தமிழகம் முழுவதும் குறை தீர்வு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்காக  குறை தீர்வு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் வட்டங்கள் வாரியாக இந்த முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம் … Read more

பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுப்பது குறித்து தீவிர ஆலோசனை !

இந்திய ராணுவம் ,எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினராலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளாலும் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான,ஆலோசனையை தீவிரப்படுத்தியிருக்கிறது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவட் (Bipin Rawat) தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருக்கின்றனர். எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் ஊருடுவலை முறியடிப்பது பற்றியும், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை நடைபெறுவதாக, ராணுவ உயர் … Read more

IPL 2018:இரண்டுவருடங்கள் தவமிருந்த அணிகள் நேருக்கு நேர் மோதல்!ஏக்கத்தை தீர்க்கப் போவது சென்னையை ?ராஜஷ்தானா ?

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில்  மோதுகின்றது. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக புனேவில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, … Read more

ராகுல் காந்தி என்ன செஞ்சாலும் உடனே இன்பார்ம் பண்ணுங்க!பாஜக மேலிடம் உத்தரவு!

பாரதிய ஜனதா கட்சி,நீதிபதி லோயா மரணத்தை அரசியலாக்க முயலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயலை அம்பலப்படுத்துமாறு தனது எம்.பிக்களை கேட்டுக்கொண்டிருக்கிறது. நீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, நீதிபதி லோயாவின் மரணத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டித்துள்ள பா.ஜ.க. ராகுல் காந்தி உள்ளிட்டோர் லோயா மரணத்தை … Read more

ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம் !இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு !பீதியான மக்கள்

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லின் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, செண்ட்ரல் ரயில் நிலையம், அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் விமானங்கள் பறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த 1939ஆம் ஆண்டு முதல், 1945ஆம் ஆண்டு வரை நடந்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள், ஜெர்மனியில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.