சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்க அமைச்சர் செய்த செயலை பாருங்கள் !

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியினரை, உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.நேற்று காலை 11 மணியளவில் மின்துறை அமைச்சர் தங்கமணி, முதலமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். திருச்செங்கோடு – ராசிபுரம் சாலையில் தென்னம்பாளையம் அருகே சென்றபோது, காரில் சென்ற தம்பதியினர் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட அமைச்சர், காரிலிருந்து உடனடியாக இறங்கினார். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தம்பதியினர் மற்றும் அவரது மகனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் செய்திகளுக்கு … Read more

சீனாவில் ஒரே நேரத்தில் பத்தாயிரம்பேர் பாரம்பரிய மூங்கில் கொம்பு நடனம்!

சுற்றுலாப் பயணிகளை  சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நடனத் திருவிழா வெகுவாக கவர்ந்தது. ஹைனன் (( hainan )) மாகாணம் உருவானதன் 30 ஆண்டு விழா ஹைக்கொ (( haikou )) நகரில் பிரம்மிக்க வைக்கும் வகையில் அரங்கேறியது. விழாவில் ஆடல், பாடல் என கண்கவர் இசை நிகழ்ச்சிகள் களைகட்டின. பாரம்பரிய மூங்கில் கொம்பு நடனத்தில் பங்கேற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் நடனமாடி பார்வையாளர்களை வியக்க வைத்தனர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 மத்தியப் பிரதேச அமைச்சர் பாலகிருஷ்ண படிதார் விவசாயிகள் தற்கொலை குறித்து சர்ச்சை கருத்து!

மத்தியப் பிரதேச மாநில அமைச்சரின் பேச்சு  விவசாயிகள் தற்கொலை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அம்மாநில அமைச்சர் பாலகிருஷ்ண படிதார் (( balkrishna patidar)) தற்கொலை என்பது உலகளாவிய பிரச்சனை என்று கூறினார். தற்கொலை செய்பவர்களில், தொழிலதிபர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் இருப்பார்கள் என்று கூறிய அவர், விவசாயிகள் மட்டுமே தற்கொலையில் ஈடுபடுவது போன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தற்கொலை செய்பவர்களுக்கு தான் அதன் உண்மைக் காரணம் தெரியும் என்றும், … Read more

IPL 2018:எப்பவுமே இவருதான் மேட்ச் வின்னர் !ரோகித் சர்மா புகழாரம்!

மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் எளிதாக வெற்றிபெற்றது. ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதியது. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்ட்டும் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஷூர் ரகுமானும்நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டுமினி, பென் கட்டிங் சேர்க்கப்பட்டிருந்தனர். சென்னை அணியில் … Read more

இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி-ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து பேசுகிறார் . முதல்வர் பழனிசாமி,காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு பதில் வராத நிலையில் ஆளுநரை சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தக் கோரிக்கை வைப்பார் என தெரிகிறது. காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி தீர்ப்பு வரும் நிலையில் ஆளுநர் – முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more

தமிழக அரசு மது வருமானத்தை நம்பியிருப்பது பெரும் அவமானம்!அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,தமிழகத்தில் மாதந்தோறும் 500 மதுக்கடைகளை மூடி, காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள 700 மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை கடந்த 2017ஆம் … Read more

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை! மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு நிதி வழங்காவிட்டால் அரசு முடங்கிவிடும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காவிட்டால், அரசு முடங்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்ட தடுப்பு சுவரை அமெரிக்க அமைக்க உள்ளது. இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்காவிட்டால் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படுவதை … Read more

ஸ்டாலின் சொன்னால் அ.தி.மு.க. வினர் அனைவரும் ஒரு பக்க மீசையை எடுப்போம்!அமைச்சர் சவால்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் , காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்க தி.மு.க. எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் சி.வி. சண்முகம், காவிரி  விவகாரத்தில் திமுக மேற்கொண்ட முயற்சிகளைக் ஸ்டாலின் கூறினால், அ.தி.மு.க. வினர் அனைவரும் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வோம் என்று சவால் விடுத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடரும் விலகல் வைத்தியம்!நட்சத்திர வீரர் விலகல்!

அடுத்த 2 வாரங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தசைப்பிடிப்பு காரணமாக  விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-வது ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து 8 அணிகளிலும்வீரர்களுக்கு காயம் ஏற்படுவதும், விலகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, டூப்ளசிஸ், கேதார் ஜாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு தற்போதுதான் மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு வீரர் காயத்தால் விழுந்துள்ளார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் … Read more

80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் அண்ணா பூங்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,  அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனான … Read more