தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா ஆலோசனை !

பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகின்றார்.இதில்  தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஓன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரித்த உச்ச நீதிமன்றம்  தாஜ்மஹால் உலகின் 7 அதிசயங்களுள் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மேலும் தாஜ்மஹாலில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.பல இடங்களில் தொழுகை நடத்த இடங்கள் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்!

பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.அரசுக்கு மக்களவைத் தேர்தலில் வலிமையை கூட்டுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிக்கலில் சிக்கிய சர்கார்!விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சர்கார் திரைப்பட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. AR முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார்  படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது. இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் … Read more

இனி யாரும் தப்ப முடியாது! வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு!

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் பரிந்துரைத்தார்.  பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம் என்று  தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறினார். இதையடுத்து  உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்   வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய … Read more

லோக் ஆயுக்தா மசோதா:தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார். முன்னதாக இந்த சட்டத்தை கடந்த 2013 மத்திய அரசு இயற்றியது .இதை பின்பற்றியே தமிழக அரசின் லோக் ஆயுக்தா மசோதா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க வழக்கு:சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பின்னர் பன்னீர்செல்வம் ஒரு அணியாக பிரிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதை தொடர்ந்து  துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரி … Read more

அகதிகளின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும்! சுப்ரமணியன் சுவாமி

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 4000 அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அகதிகளின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும்.மேலும்  தன்னுடைய கோரிக்கை கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்த சுஷ்மா ஸ்வராஜூக்கு  நன்றி என்று வசுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திமுக மாநில சுயாட்சி மாநாடு:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்? திருச்சி சிவா எம்.பி.

திமுகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாநில சுயாட்சி மாநாடு குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசியில் பேசினார்.திமுகவை பற்றி சரிவர தெரியாமல் யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் கூட, திமுக ஊழல் கட்சி என கெஜ்ரிவால் பேசி இருக்கலாம். கெஜ்ரிவாலிடம் உண்மையை விளக்குவோம்என்று  திமுக எம்.பி. திருச்சி தெரிவித்துள்ளார். … Read more

#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackAmitShah!அமித் ஷா வருகைக்கு தமிழகத்தில் கிளம்பியது எதிர்ப்பு!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா (#GoBackAmitShah ) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது. பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.அரசுக்கு மக்களவைத் தேர்தலில் வலிமையை கூட்டுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் … Read more