#BREAKING: +2 பொதுத்தேர்வு எப்போது..? முதலமைச்சர் ஆலோசனை..!

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் … Read more

#BREAKING: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!

வைகை அணையிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26792 … Read more

முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு..!

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் 1-ஆம்  தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி மதகுபகுதியில் … Read more

#BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டைப் பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர். … Read more

ஜூன் 3 முதல் 5 வரை  தடுப்பூசி போடப்படாது -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் !

ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என  சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில், சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

மேற்குவங்க முதல்வரின் ஆலோசகராக ஆலாபன் நியமனம்..!

ஆலாபன் பந்தோபத்யாய இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. தாமதமாக வந்ததுடன் மம்தா பானர்ஜி பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப … Read more

#BREAKING: மே மாத நிவாரணத்தை வாங்காதவர்கள் ஜூனில் வாங்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு.!

ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகையான 4,000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல … Read more

#BREAKING: கெபிராஜை ஜூன் 14 வரை சிறையிலடைக்க உத்தரவு..!

கெபிராஜை வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு  வெளிவந்தன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் … Read more

#BREAKING: அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை ,15 வகை மளிகைப்பொருட்கள் அறிவிப்பு..!

அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு … Read more

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு..!

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “ கல்பனா சாவ்லா விருது ” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த … Read more