விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

Supreme Court of India - Election Commission of India

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுகையில், VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதிக்கட்ட விசாரணை … Read more

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT case - Supreme court of India

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள் மூலம் இயந்திரமயமானது முதலே அதில் பதிவாகும் வாக்குக்களின் உண்மைத்தன்மை குறித்த பல்வேறு சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை ஹேக் செய்து ஒரு சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிய வைக்கிறார்கள், கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த சந்தேகங்கள் தற்போது … Read more

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress MP Rahul gandhi

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் அதனை முறைப்படுத்துவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி வருகிறது. இதுகுறித்து, இன்று டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய … Read more

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்… 

Rahul Gandhi - PM Modi

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் பாஜக ஆட்சியில் இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை விவசாய கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து … Read more

ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?  

Sam Pitroda - Rahul Gandhi

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இந்த வார வெள்ளிகிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை … Read more

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) … Read more

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

Union minister Amit shah

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆளும், I.N.D.I.A கூட்டணியில் … Read more

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Delhi CM Arvind kejriwal

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி இரவு கைது செய்தனர். அதற்கு முன்னதாக இதே வழக்கில், டெல்லி முன்னாள் அமைச்சர்கள், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் … Read more

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi in Rajasthan Election Campaign

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று தேர்தல் முடிந்தது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக – காங்கிரஸ் நேரடியாக களமிறங்கும் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரங்கள் வெகு … Read more

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Chennai Pallikaranai Honor Killing

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி, அதே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரவீன், தனது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியில் சென்றுள்ளார். … Read more