சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பள்ளிகளுக்கான நேரத்தை நிர்வாகமே தீர்மானிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை  கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் … Read more

ஆளுநரின் கருத்து குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் … Read more

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 217 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 217 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 145 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து … Read more

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்…!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அங்கு 3 இடங்களை பாஜகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ,இதனையடுத்து, நிர்மலா சீதாராமனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது … Read more

ஆளுநர் பொறுப்பை துறந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் – முத்தரசன்

21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…!

தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ஆற்றல் … Read more

ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய இந்த விடியா அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா? – ஈபிஎஸ்

ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தல்.  ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, … Read more

வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! பிரஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா கலந்து கொண்டு விளையாடினார். குரூப் ஏ பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். 7.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். கடைசிச் சுற்றில் இந்திய வீரர் பிரனீத்தைத் தோற்கடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து … Read more

பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது – ஜோதிமணி எம்.பி

பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது என  ஜோதிமணி எம்.பி ட்வீட்.  அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகள்,கல்லூரிகளில் மாணவிகளைப்.பாதுகாக்க வேண்டிய … Read more