கோடநாடு வழக்கில் வி.சி.ஆறுகுட்டியிடம் 3-வது முறையாக விசாரணை..!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள  நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், கோவை தொழிலதிபர் மணல் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் … Read more

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச விளையாட்டு … Read more

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றை விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக அலுவலகம் அருகே மோதல் – 400 பேர் மீது வழக்குப்பதிவு..!

அதிமுக அலுவலகம் அருகே மோதலில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.  அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர்.  ,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். அதன்பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக … Read more

திமுக அரசு இதை மட்டும் மறந்து விடுவார்கள் போல – அண்ணாமலை

திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல என அண்ணாமலை ட்வீட்.  நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் MP திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். … Read more

அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளர்..!

அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளரை எச்சரித்து அனுப்பி வைத்த காவல்துறை அதிகாரிகள்.  நேற்று அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர்.அதன்பின்னர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள … Read more

சென்னையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிசாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே வேளையில்,அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். … Read more

குடியரசு தலைவர் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் இன்று சென்னை வருகை..!

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று இரவு  சென்னை வரவுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று இரவு  சென்னை வரவுள்ளது. இந்த பெட்டிகள் தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

#BREAKING : சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது. … Read more

எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.