கருமுட்டை விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் . 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என … Read more

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது – தமிழக அரசு

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்க  42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.  தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன், பாராட்டத்தக்க வகையில், சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த, தலைசிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிந்தது. அந்த வகையில், சமூகப் பொறுப்புடன் செயல்படும் … Read more

நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது – புத்தகம் வெளியிட்ட மக்களவை செயலகம்..!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை … Read more

#BREAKING : பிரதமர் மோடியை சந்திக்க அடுத்த வாரம் டெல்லி விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைப்பதற்காக பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக … Read more

சிங்கப்பூர் தப்பி ஓடினார் கோத்தபய ராஜபக்ஷே..?

மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார். இதற்கிடையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றினர். இது … Read more

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்ல.. வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – அமைச்சர் எல்.முருகன்

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் எல்.முருகன் பேச்சு.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன் அவர்கள் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். தமிழர்கள் மற்றும் … Read more

கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் போல தான் இருக்க வேண்டுமா? – அண்ணாமலை

ஆளுநர் என்பவர் கோப்புகளில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்போல் தான் இருக்க வேண்டுமா? என அண்ணாமலை  எழுப்பியுள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி ஆளுநரை கடுமையாக சாடியுள்ளார். மேலும் கவர்னர் சானதான தர்மத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது இது தமிழகத்திற்கு முக்கியமான ஒன்றுதான். ஆளுநர் எதை பேசினாலும் எதை பேசினாலும் அரசியல் … Read more

#BREAKING : இவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..!

ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைவரும் தடுப்புச் செலுத்திக் கொள்ளுமாறும், முக கவசம் கட்டாயம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு … Read more

வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.  சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.

கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது – புகழேந்தி

ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம் என புகழேந்தி பேட்டி.  ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். நான்கு வருடம் நடந்த பணக் கொள்ளையையும், ஜாதி வெறியையும் கூறிவிட்டார். பொன்னையன் வாழ்க! அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை என தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி … Read more