50 GB டேட்டா இலவசம் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம்  காவல்துறை எச்சரிக்கை.  தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இன்று அனைவரது கைகளிலுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் தவழ்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது மக்களை எளிதாக சென்று விடுகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மோசடி கும்பல்களிடம் சிக்கி பலர் ஏமாந்துள்ளனர். இந்த நிலையில் பொதுவாகவே காவல்துறை தரப்பில் தங்களது … Read more

ஜல்லிக்கட்டு போட்டி – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கு, இன்று விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லூத்ரா, பொங்கல் நடைபெறும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இந்த வழக்கை … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் நிவாரணம் விநியோகம்..!

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் … Read more

சட்ட ஒழுங்கு குறித்து பேச பழனிசாமிக்கு என்ன அடிப்படை இருக்கிறது – அமைகள் தங்கம் தென்னரசு

ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.   அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா … Read more

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்..!

இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கே.அஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#JustNow : விதிமீறிய நடிகர் விஜய்.? போக்குவரத்து துறை அபராதம்…!

விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு. நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்..!

வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்.  சென்னை தலைமை செயலகத்தில், வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தவறான ஏஜென்சிகளால் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள்தெரிவித்துளள்னர். சமீப நாட்களில் ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடு சென்று சிக்கி தவித்தவர்கள் பலர் … Read more

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது – அண்ணாமலை

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் மற்றும் முக்கிய குற்றவாளியான 24 வயதான முகமது ஷாரிக் ஆகியோர் தீயில் கருகி காயமடைந்தனா். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து  புதிய தகவல்கள் வெளிவந்த வந்த வண்ணம் உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த மாணவரின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்..!

மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய ஆசாத்தின் செல்போனில் 2000 ஆபாசப்படங்கள்.  பெங்களூரு ஒசகெரேஹள்ளி பள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு இளைஞர் ஒருவன் நின்று  கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து போலீசார் கல்லூரியில் உள்ள … Read more

ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார் – முத்தரசன்

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.  திருநெல்வேலியில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார்; ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார். சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள்; பாஜகவுக்கு ஒவ்வாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக … Read more