இந்த மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மகனிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு தாய் தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20 ஆயிரம் … Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தேதி அறிவிப்பு..!

பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் … Read more

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள்! – பிரதமர் மோடி

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை பேசாதீர்கள் என பிரதமர் மோடி கட்சியினருக்கு அறிவுரை டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 35  அமைச்சர்கள், பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள், 37 மாநில பாஜக தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் மிகச் சிறந்த சகாப்தம் இனி … Read more

தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது – செல்வ பெருந்தகை

தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது என செல்வா பெருந்தகை தெரிவித்துள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது. கிடப்பில் உள்ள ஆன்லைன் ரம்மி, … Read more

பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் … Read more

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகை முன்னிட்டு கென்யாவிலிருந்து நாமக்கல்லுக்கு வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞருக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டு தனிமையில் உள்ளார். இதனையடுத்து, இளைஞரின் குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் – அமைச்சர் உதயநிதி

கல்வியை வழங்கி சமூகத்தில் உயர்நிலையை அடையச் செய்வது தான் திராவிட மாடலின் இலக்கு என உதயநிதி பேச்சு. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்ப்பை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல தோன்றி லட்சக்கணக்கான பணத்தை வசூலிக்கின்றன; பொருளாதாரத்தில் பின் … Read more

#Justnow : தமிழகம் என குறிப்பிட்டது இதற்காக தான்..! – ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆளுநர் தமிழகம் என்று கூறியது குறித்து விளக்கம் அளித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியீடு.  காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் … Read more

கூகுள், அமேசான் நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறதா..?

மைக்ரோசாப்ட் நிறுவனம்  சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்.  கடந்த சில மாதங்களாகவே கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதனை தொடர்ந்து, தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம்  சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாகவும், மனித வளம் மற்றும் … Read more

நில அளவை துறையில் புதிய செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் புதிய மென்பொருள் செயலியை தொடக்கி வைத்தார். அதாவது நில அளவை மற்றும் நில வரைவு திட்ட துறையின் புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்துள்ளார். வீட்டுமனை உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், பட்டா மாறுதல் செய்யும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்பின்தொடர பணிக்கான புதியசெயலியையும்  தொடங்கி வைத்துள்ளார்.