மூன்று மாநில தேர்தல் முடிவுகள் – எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

mk stalin

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

நாளை முதல் ரூ.6000 விநியோகம்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

Tamilnadu CM MK Stalin - Chennai flood relief 2023

இந்த மாத தொடக்கத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும், இந்த புயலின் போது, சென்னை பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது, பல நாட்களாக பார்த்து பார்த்து சேர்ந்த உடைமைகள் எல்லாம் இந்த மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தது. ஆனால், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் தான் … Read more

பாலியல் வழக்கு – உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ-வுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

kond

உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், சோன்பத்ரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம்  குற்றசாட்டை உறுதி செய்த நிலையில், ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்டுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது ராம்துலர் கோண்டின் சட்டசபை உறுப்பினர் பதவி  … Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தெலுங்கானா முன்னாள் முதல்வர்..!

கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு  அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் … Read more

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!

Rajasthan CM Bhajanlal Sharma

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட … Read more

குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள்  ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் … Read more

பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, ஈபிஎஸ்..!

DMDK Vijayakanth - Premalatha Vijayakanth

நேற்று தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும்  முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும்  , தொண்டர்கள் … Read more

இதுதான் பாஜகவின் நாடாளுமன்ற மரபு! – சு.வெங்கடேசன் எம்.பி

su venkatesan MP

நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்குள் இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்றும் மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14  பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் … Read more

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Parliment

நேற்று முன்தினம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். … Read more

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் – ஒடிசா குழு இன்று சென்னை வருகை

Ennore Oil Spill

மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கிய நிலையில், சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வெள்ளபாதிப்பால் சென்னையை சேர்ந்த பெரும்பாலான மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதி மக்கள், குறிப்பாக மீனவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து,உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஆர்.கண்ணன் தலைமையில் இந்த ஆய்வு குழு உருவாக்கப்பட்ட … Read more