உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை இந்த மின்னஞ்சளுக்கு அனுப்புங்கள்..!ஸ்டாலின்

உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் குடிநீர் பஞ்சம் ஆரம்பித்து  தற்பொழுது உள்ள வேலையில்லாத் திண்டாட்டங்கள் வரை தமிழ்நாட்டில்  நிலவுகின்ற ஒவ்வொரு அவலமும் பற்றி வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மக்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகள் எனக் கருதுவதை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று திமுக தலைவர்   ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்  

பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!ராஜ்யசபா வேட்பாளராக பாஜக அறிவிப்பு

குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளரை  பாஜக அறிவித்துள்ளது. பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில்  பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய்சங்கர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

லஞ்சம் வாங்கும் காவலுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை?ஆணையம் அரை

லஞ்சம் வாங்கிய காவல் துறையினருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை? என்று கோயம்புத்தூர் டி.ஜி.பி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆணையம் காதலர்களை மிரட்டி லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்.? என்று நான்கு வாரங்களுக்குள் விளக்கம் தரவும்  மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இந்த நாளில் அறிவித்தார்..! கொறடா சக்கரபாணி..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக கொறடா சக்கரபாணி இது குறித்து அவர் தெரிவித்துள்ளது ஜூன் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது.இதில்  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று  கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

141 பிஞ்சுகளின் மூச்சை நிறுத்திய மூளைக்காய்ச்சல்..!என்ன செய்கிறது..?மத்திய- மாநில அரசு.! உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

நாட்டையே தினமும் சோகத்தில் ஆழ்த்தி வரும் பீகார் மாநில மூளைக் காய்ச்சளால் குழந்தைகள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இதுவரையில்   141 பிஞ்சுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த துயரம் சம்பவம் காரணமாக  மனோகர் பிரதாப் என்கின்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்காமல் தான் இந்த உயிரிழப்பு நேரிட்டுள்ளது மற்றும் உயிரிழப்புகளை தடுக்காமல் மத்திய மற்றும்  மாநில அரசுகள் … Read more

ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்..!வெளியாகிய மத்திய தகவல்

பாஜக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது நடப்பு ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்து வருகிறது.அப்படி தாயாரிக்கும் பட்ஜெட்  வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது என்னவென்றால் மத்திய அரசின்  ‘ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் வழங்க பட வேண்டிய ஊதியம் அனைத்தும் தள்ளிப்போகும் எனவும் தாமதம் ஆகும் … Read more

வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா…?அமைச்சர் கேள்வி

வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா…? என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கோவையில்  பல திட்டங்களை செயல்படுத்தியும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காதது புதிராக உள்ளது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா.?என்று மக்களிடம்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

கிராமசபை கூட்டம்..! கட்சி உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் ..!கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் முடியாது..!மீன்வளத்துறை கரார்

புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த நாளிலிருந்து மானிய டீசல் வழங்கவில்லை என்ற  குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர். இது குறித்து மீன்வளத்துறை தெரிவிக்கையில் மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே 448 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதற்கான தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் :ஓட்டளிக்க வந்த என் முகத்தில் கரியை பூசி விட்டனர்..! நடிகை வேதனை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை 1470 நடிகர் -நடிகைகள் வாக்களித்துள்ளனர்.ஆனால் பலருக்கும் ஓட்டுரிமை இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.அதே போல் மைக் மோகன் … Read more