அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரியங்கா… காங்,. தொண்டகள் உற்சாகம்…

தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார். வரும், 2022ல், உத்திரபிரதேச மாநில  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் … Read more

கொரோனாவிற்கு ஜர்க்கண்ட் எம்எல்ஏ பலி…முதல்வர் இரங்கல்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மந்திரி ஹாஜி ஹுசைன் அன்சாரி உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் குறையாமல் கூடிக்கொண்டே வரும் கொரோனாத்தொற்றால் உலகமே ஆடி போய் உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனாவில் இருந்து … Read more

ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் உணவு விற்க அனுமதி- இரயில்வே அறிவிப்பு

ரயில்களில் உணவு விற்க இரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க  நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச்.,22ம்  தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போதுஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே., 12ந்தேதி முதல் தலைநகர் டெல்லியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்க 15 ஜோடி பிரிமியம் ராஜ்தானி சிறப்பு ரெயில்களை ஜூன் 1ந்தேதி முதல் 100 ஜோடி தொலைவிட ரெயில்களையும் ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கியது. இதற்கு அடுத்தகட்டமாக  தீபாவளி … Read more

கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர்-ராஜினாமா!

கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி தனதுபதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக சி.டி.ரவி பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை  முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடல்நிலை…??? மருத்துவர்கள் அடுத்தடுத்து அறிக்கை

உலகயத்தையே ஒரு வித பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடு என்று வாய்மொழியப்படும்  அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவ நடனத்தை அரங்கேற்றி வருகிறது. அந்நாட்டில் சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என்று  கொரோனா பாதிப்பிலேயே முதலிடத்தில் முன்னதாக நீடிக்கிறது. இந்நிலையில் இந்தப் பாதிப்புக்கு மத்தியில் அடுத்த மாதத்தில் நவ.,3ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் … Read more

இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு..முதல் முறையாக களமிரங்கும் ரபேல்

இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது. இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது … Read more

48 மணிக்கு பிறகு தா..வெள்ளைமாளிகை! வீடியோவில் ட்ரம்ப்.!வெளியீட்டு நம்பிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் … Read more

நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம்..ஆனால்?-ஜ.நாவில் இந்தியா சூளுரை

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா முதலில் அணு ஆயுதங்களை  பயன்படுத்தாது என்று, வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா தெரிவித்துள்ளார். ஐ.நா பொது சபையில், சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது இந்நிலையில்  நேற்று இச்சபையின் சிறப்பு கூட்டம் . ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா பங்கேற்று பேசியதாவது: தேசிய பாதுகாப்பிற்கு அணு ஆயுதங்கள் முக்கியம் என்று சில … Read more

விண்வெளி பயணத்தில் மீண்டும் சாவ்லா-சீறிபாய்ந்த நாசாவின் சிக்னஸ் கார்கோ

இன்று அதிகாலை நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்தரான விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட சிக்னஸ் கார்கோ(Cygnus Cargo) என்ற விணகலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8 ஆயிரம் பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2 நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை  சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடையும்.இதற்கு முன் கடந்த வியாழன் … Read more

வறுமையை காரணம் காட்டி காப்பத்தில் அடைப்பதா? காப்பக குழந்தைகளை குடும்பத்தில் ஒப்படைக்க- NCPCR அதிரடி உத்தரவு!

நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள்  வசித்து வருன்றனர். அவ்வற்றில் தமிழகம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, மேகாலயா, மற்றும் மிசோரம் … Read more