முதலமைச்சர் பொதுநிவாரண நிதி… 399 கோடியே 93 இலட்சம்… தமிழக அரசு அறிவிப்பு…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தற்போதுவரை 399 கோடியே 93 லட்சம் வந்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை தடுக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 … Read more

சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு….

தமிழகம் முழுவதும் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10-ம் வகுப்பும், சமையல் உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த கல்வித்தகுதியில் அரசு வேலை கிடைப்பதால், ஏராளமானவர்கள் தங்களது விண்ணப்பங்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கொடுத்து வந்தனர். இதனால் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் சூப்பர் ஸ்டார் புதிய கட்சி… பிப்ரவரியில் வெளியாகலாம் என தகவல்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன. தற்போது அ.இ.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று, அதற்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பலகாலமாக  தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, நம்பப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளரை, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு, மூன்று மாதத்திற்கு … Read more

வரும் 15ஆம் தேதி முதல் திரைஅரங்குகள் திறப்பு… மத்திய அரசு அறிவிப்பு..

வரும், 15 தேதி வியாழன் முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து திரை அரங்கங்களும், கடந்த  மார்ச், 16 முதல், மூடப்பட்டன.தற்போது  வரும், 15 முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. திரையரங்க கேன்டீன்களில், பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. கேன்டீன்களில், ஆன்லைன் பண பரிவர்த்தனை … Read more

பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்திற்கு 25.14 லட்சம் நிதி உதவி… நெகிழவைத்த சம்பவம்…

சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் சரவணகுமார், வயது 37. இவர், சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த   ஆகஸ்ட் 18ல் உயிரிழந்தார். இவருக்கு, இந்துமதி என்ற மனைவியும்,  கோபிகா, 11, பிரியங்கா, 9, என, இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக காவல் துறையில், 2003ல், … Read more

பேட்டரியில் இயங்கும் புது ரயில் அறிமுகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு…

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட, அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும், ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுவருகிறது.மேலும்,  சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் இன்ஜினுக்கு, ‘பசுமை’ என, பெயரும்  வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்ஜின், பேட்டரி மூலம் மூன்றரை மணியில் இருந்து, நான்கு மணி நேரம் வரை இயங்கும் எனவும்,  24 பெட்டிகள் வரை இந்த இன்ஜீனுடன் இணைத்து இயக்க முடியும். இந்த இன்ஜின் 1,080 டன் வரை இழுத்து செல்லும் திறன் கொண்டது. … Read more

அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதி… ஒருநாளைக்கு 1000பேர் வரை அனுமதி…. அறிவிப்பு விரைவில்…

சபரிமலை அயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். … Read more

பள்ளிகள் மூடல்… தனியார்பள்ளி முதல்வர் தேநீர் விற்பனை… அரசு பல ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டுகோள்…

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக  பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், தேநீர் விற்பனை செய்து வருகிறார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; இவரது மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை … Read more

இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் புதிய ஒப்பந்தம்… மத்திய அரசு அதிரடி…

நம் அண்டை நாடான சீனாவால் நம் நாட்டில் அடிக்கடி  இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட திறன் பேசி  செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  திறந்த நம்பகமான நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் … Read more

மீண்டும் தொடங்குகிறது ரயில்சேவை…புதிய அறிவிப்புகள் வெளியாகியது….

கடந்த  7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய ரெயில் சேவை விரைவில் தொடங்குகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதி முதல் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்,கடந்த  7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய … Read more