மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

Bramayugam box office

இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான நாளில் இருந்து  விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவை பின்னணியாக வைத்து குஞ்சமோன் பொட்டி என்ற கதாபாத்திரத்தின் கதையைஹாரர் திரில்லரில்இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. (பிப்ரவரி 18) நேற்றைய தினம் இப்படம் ரூ.3.90 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளில் ரூ.3.1 கோடி வசூலித்தது என்றும், அதன் இரண்டாவது நாளில் ரூ.2.5 கோடி எனவும்  மூன்றாம் நாளில் … Read more

BAFTA Awards 2024: 7 விருதுகளை வென்ற ‘Oppenheimer’ திரைப்படம்.!

Oppenheimier - BAFTAs 2024

இங்கிலாந்தில் நடைபெற்ற ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான “Oppenheimer” திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. இதனிடையே, சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. மார்ச் 10ம் … Read more

2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

Tamil Nadu Budget 2024-25

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், … Read more

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக விருப்பமனு அறிவிப்பு.!

Elections2024 - ADMK

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான, அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் … Read more

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய்..ஆரவாரம் செய்த ரசிகர்கள்.!!

GOAT Shooting Spot

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய் பார்த்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் (The Greatest of All Time) ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல … Read more

ஸ்டைலிஷ் முத்தழகு…கூலிங் கிளாஸ் என கெத்து காட்டும் பிரியாமணியின் புகைப்படங்கள்.!

priyamani

தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை பிரியாமணி, தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு கஸ்டடி மற்றும் ஜவான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறார். இது போக, Article 370 என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக, Bhamakalapam 2 … Read more

அமீர் கான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘சுஹானி பட்நாகர்’ உயிரிழந்தார்.!

Suhani Bhatnagar

அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஹானி பட்நாகர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17 ) உயிரிழந்துள்ளார். அந்த சிறுமிக்கு வயது 19, அவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அவர் தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது உயிரிழப்பு குறித்து, அமீர் கானுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் சுஹானிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். அண்மையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

கட்சி பெயரில் ‘க்’ சேர்க்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு?

Vijay - TamizhagaVetriKazhagam

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

மாந்திரீகனாக மிரட்டிய மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் இரண்டு நாள் வசூல்.!

Bramayugam box office collection

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.5.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கேரளாவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ‘பிரம்மயுகம்’ படத்தை இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மம்முட்டி தவிர அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, படத்தின் ஒளிப்பதிவுவை … Read more

பால் போன்ற நிறம்…33 வயது போலவே தெரியலேயே! ரச்சிதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Rachitha

2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தனது தொலைக்காட்சியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்ததாக இளவரசி சீரியலில் நடித்தார். பின்னரே, ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டிருந்தார். இவருக்கு பெரியதாக படத்தில் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்கும் வைப்புகள் குவிந்து வண்ணம் உள்ளது. இதற்கிடையில், … Read more