இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் மோதல்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் மோதல்

நேற்று நடந்த நடப்பு உலகக்கோப்பையின் எட்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னா பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோத உள்ளது.இப்போட்டியானது  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியானது இந்திய நேரப்படி 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube