உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியை காணாத ஆஸ்திரேலிய அணி!

இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில்

By murugan | Published: Jul 11, 2019 12:47 PM

இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 9 லீக் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் இந்திய அணியுடன் தான் முதன் முறையாக தோல்வி அடைந்தது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 11 உலகக்கோப்பை தொடரில் 7 முறை அரை இறுதி போட்டியில் விளையாடி உள்ளது. ஆஸ்திரேலிய அணி விளையாடிய 7 முறையும் வெற்றி பெற்று உள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி செல்லுமா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாடும். 1975: வென்றது 1987: வென்றது 1996: வென்றது 1999: வென்றது 2003: வென்றது 2007: வென்றது 2015: வென்றது 2019: ????  
Step2: Place in ads Display sections

unicc