சந்திராயன் விண்கலத்தை பார்த்து பறக்கும் தட்டு என நினைத்த ஆஸ்திரேலிய மக்கள் !

சந்திராயன் விண்கலத்தை பார்த்து பறக்கும் தட்டு என நினைத்த ஆஸ்திரேலிய மக்கள் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த ராக்கெட் ஆஸ்திரேலியாவின் வான் பரப்பில் மேகமூட்டம் இடையே பறந்து சென்றபோது பெரும் வெளிச்சத்தை  ஏற்படுத்தியது.

அதை பார்த்த குயின்ஸ்லாந்து மாகாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தை சார்ந்த மக்கள் பார்த்ததும் “யுபோ” என்று அழைக்கப்படும் அடையாளம் காண முடியாத பறக்கும் தட்டும் என நினைத்துக் கொண்டனர்.

மேலும் சிலர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் வானில் பறக்கும் தட்டு பறப்பதாக கூறினார். அவர்கள் கொடுத்த தகவலின்படி அங்கு வந்த  பத்திரிக்கையாளர்கள் வானில் தோன்றிய வெளிச்சத்தை வீடியோ பதிவு செய்தனர்.

அதைப் பார்த்த வானியல் வல்லுநர்கள் அது பறக்கும் தட்டு இல்லை  விண் கலத்தை ஏற்றிச்  செல்லும் ராக்கெட் என கூறி தெளிவுபடுத்தினர்.

author avatar
murugan
Join our channel google news Youtube