ஆஷஸ் தொடர் : டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான  ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட் (கேப்டன் ), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர் ), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan