பங்களாதேஷ் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி !புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
 ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,ஆரோன் பிஞ்ச்  இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடியாக விளையாடி  பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டன.
அதிரடியாக விளையாடி ஆரோன் பிஞ்ச்  53 ரன்கள் எடுத்து வெளியேறினர்.பிறகு களமிறங்கிய உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் கூட்டணியில் அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலாபுறமும் பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்கவிட்டனர்.

டேவிட் வார்னர் அதிரடியில் சதத்தை நிறைவு செய்தார். பிறகு விடாமல் அதிரடியாக விளையாடி 147 பந்தில் 166 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பிறகு மத்தியில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 89, க்ளென் மேக்ஸ்வெல் 32,  ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.
பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் சவுமியா சர்க்கார் 3 விக்கெட்டை பறித்தார்.382 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் , சவுமியா சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடகத்திலே சவுமியா சர்க்கார் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
ஆனால் இவர்களின் கூட்டணி அதிக நேரம் நீடிக்கவில்லை ஷாகிப் அல் ஹசன் தனது கேட்ச்சை வார்னரிடம் கொடுத்து கொடுத்தார் 41 ரன்னில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் சிறப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார்.பங்களாதேஷ் அணியில் தமீம் இக்பால் 62 ,லிட்டன் தாஸ் 20 ,மஹ்மதுல்லா 69,சப்பீர் ரஹ்மான் 0 ,மெஹிடி ஹசன் 6 ரன்களுடன் வெளியேறினார்.இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 102 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் கொல்டர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டையும் , மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் சம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.

author avatar
murugan