#NZvAUS : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் :
ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:  
மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், சோதி , லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.