இன்றைய பலப்பரீச்சையில் ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் அணிகள் மோதல்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது

By murugan | Published: Jun 12, 2019 07:45 AM

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இன்றைய போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 103 போட்டிகளில் மோதி உள்ளது.இப்போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 67 முறையும் , பாகிஸ்தான் அணி 32 முறையும் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி டிரா ஆனது.ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மேலும் இந்த இரு அணிகளும் இதுவரை 20-20 சர்வதேசப் போட்டிகளில் 20 போட்டிகளில் மோதி உள்ளது.இப்போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 7 முறையும் , பாகிஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்று உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 64 போட்டிகளில் விளையாடி அதில் பாகிஸ்தான் அணி 15 முறையும் , ஆஸ்திரேலியா அணி 31 முறையும் வெற்றி பெற்று உள்ளது. 18 முறை டிரா ஆனது. இந்த விபரங்களை பார்க்கும் போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கமே உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc