புற்றுநோய் விழிப்புணர் ஏற்படுத்த சிவப்பு ஜெர்ஸி நம்பர், தொப்பி உடன் விளையாடிய ஆஸி-இங் வீரர்கள் !

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர்  நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாள் போட்டி தொடக்க இருந்ததது மழை பெய்தால் போட்டி நடைபெற வில்லை நேற்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நேற்றைய போட்டியில் இந்த இரண்டு அணிகளும் தங்கள் ஜெர்சியில் உள்ள எங்களை சிவப்பு நிறத்தில் இடம்பெற்றது.மேலும் சிவப்பு நிற தொப்பியை அணிந்தும் இரு அணி வீரர்களும் விளையாடினர்.

ரூத் ஸ்ட்ராஸ் என்ற அறக்கட்டளை சார்பாக நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இரு அணிகளும் சிவப்பு நிறத்தை கொண்டு நேற்று விளையாடினார்கள்.ரூத் ஸ்ட்ராஸ்  அறக்கட்டளை என்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ  ஸ்ட்ராஸால் உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆண்ட்ரூ  ஸ்ட்ராஸ் மனைவி நுரையீரல் புற்றுநோயால் இறந்து விட்டார்.அதன் பின் ஆண்ட்ரூ  ஸ்ட்ராஸ் நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

author avatar
murugan