ஆடி’ காரின் விலை உயர்வு.!

Audi car prices up

மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், முன்னணி கார் நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்தயுள்ளது.அதேபோல் முன்னணி கார் நிறுவனமான ‘ஆடி’ கார் விலை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சொகுசு கார்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டது. சொகுசு கார்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதுபோலவே சொகுசு கார்களுக்கான உதிரி பாங்களுக்கான வரி 7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.இதுவே இந்த விலை உயர்வுக்குக் காரணம்.
இதனால் பல கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஆடி’யும் தனது தயாரிப்புகளின் விலை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ‘ஆடி’ நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ரஹில் அன்சாரி கூறியதாவது: ‘‘மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் எங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்தியுள்ளோம். வரியுடன் சேர்ந்து சமூக நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான கூடுதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயர்வு தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. ஆடி கார்களின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளோம். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது’’ எனக்கூறினார். ‘ஆடி’ நிறுவனத்தின் எஸ்யூவி 3 கார் 35.35 லட்சம் ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார் ஆர்8 விலை 2.63 கோடியாக உள்ளது. Audi's car price hike!