சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது-இஸ்ரோ தலைவர் சிவன்

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது-இஸ்ரோ தலைவர் சிவன்

நேற்று சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டம்  உள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ரோவர் வாகனம் இறங்கினால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் .45 நாட்களில் சந்திரயான்-2 நிலவை சென்றடையும், எந்த நாடும் செல்லாத இடத்தில் சந்திரயான்-2 ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்று தெரிவித்தார்.

Join our channel google news Youtube