சாவி போட்டு ஏ.டி.எம்-ஐ திருட முயற்சித்த திருடன்! அலாரம் சத்தம் கேட்டதும் ஓட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில், நேரு தெரிவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு நேற்று காலை வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தின் சாவியை அந்த எந்திரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
நேற்று காலை 10 மணிக்கு வந்த நபர் ஒருவர், அந்த சாவியை கண்டவுடன் அதனை திருடி எடுத்து சென்றுவிட்டு, இரவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்-ஐ கொள்ளையடித்துவிடலாம் என எண்ணி இரவில் சாவி போட்டு ஏடிஎம்-ஐ திருட முயற்சித்துள்ளான். அந்த நேரம் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டதால், பதறி அங்கிருந்து ஓடிவிட்டான். ஆனால் இவை அத்தனையும் ஏடிஎம் எந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்து வைத்துள்ளது.
பின்னர் திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனின் வங்கி ஊழியர்கள் இந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்து புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, சிசிடிவி காமிரா மூலம் ஆராய்ந்து, அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். அந்த திருடன் பெயர் சுகுனந்தன். இவர் திண்டிவனத்தை சேர்ந்தவர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.