அடேங்கப்பா! எல்லா இடத்துலயும் மனுஷன் தான் கால்பந்து விளையாடுவாங்க! இங்க மாடு கூட கால்பந்து விளையாடுது!

இன்றைய நாகரீகமான உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல், ஐந்தறிவு விலங்குகள் கூட

By leena | Published: Jul 02, 2019 01:14 PM

இன்றைய நாகரீகமான உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல், ஐந்தறிவு விலங்குகள் கூட மனிதர்கள் செய்யும் செயல்களை செய்கிறது. மனிதர்கள் என்ன செய்கிறார்களோ, அதை நன்கு கவனித்து அதுபோலவே செய்கின்றனர். இந்நிலையில் கேரளாவில், ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலரும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த மைதானத்திற்குள் நுழைந்த மாடு ஒன்று, அந்த கால்பந்தை வைத்துக் கொண்டு, அந்த இளைஞர்களிடம் கொடுக்காமல் தன் அருகிலேயே பந்தை வைத்திருந்துள்ளது. அந்த பந்தினை இளைஞர்கள் அந்த மாட்டிடம் இருந்து வாங்குவதற்கு போராடி உள்ளனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc