குறைந்தது திமுக கூட்டணியின் எம்எல்ஏ பலம் ! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்த குமார்

At least DMK alliance MLA strength! Vasantha Kumar resigns as MLA

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான  பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். ஆனால் தற்போது 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் எம்எல்ஏக்கள் பலம் 110 ஆக உள்ளது.மேலும் அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர்(அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்த்து).எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது .வசந்தகுமார் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் திமுக அணியின் பலம் 109ஆக குறைகிறது.

Congress candidate in the Lok Sabha election Kanyakumari, Congress candidate Vasanthakumar Abara won the election. In this case, the Congress party's H.Santhakumar resigned from the Nanguneri constituency MLA today. However, the DMK coalition MLAs strength is now 110 in the 22 constituency by-election.