காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடிங்க! பிரபல இயக்குனர் அதிரடி!

காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடிங்க! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம், பிரெஞ்சு படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்தின் காப்பி தான் என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்திருந்தார். மேலும், இதனை கிண்டலடிக்கும் விதத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ‘இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் என நினைக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் மேலும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘முதல் முறையை விட இந்த இரண்டாவது முறையும் ‘லார்கோ வின்ச்’ன் இலவச தயாரிப்பு. தெலுங்கு இயக்குனர்களே, என்னுடைய வேலையை காப்பி அடித்தால், குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடியுங்கள.

மேலும், இதற்க்கு முன் என் ‘இந்திய எதிர்காலம்’ பற்றி பதிவு முரணான ஒன்று தான். மன்னிக்கவும். ஆனால், உங்களுக்கு நான் என் உதவியும் புரிய முடியாது என ட்வீட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube