அசுஸ் லைரா டிரியோ மெஸ் வைஃபை(Asus Lyra Tiéro Mouse Wifi) முன்பதிவு ஆரம்பம்..!

 

கடந்த ஜனவரியில் நடைபெற்ற CES2018ல் அசுஸ் அறிமுகப்படுத்திய லைரா டிரியோ மெஸ் வைஃபை சிஸ்டத்திற்கான முன்பதிவை துவங்கியுள்ளது . கடந்தாண்டு வெளியான ஆசுஸ் லைராவின் அடுத்த வெளியீடாக வரும் இந்த புதிய மெஸ் வைஃபை சிஸ்டத்தின் விலை 299.99 டாலராக(சுமார் ரூ19,900) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அசுஸ் லைரா டிரியோவின் முன்பதிவை அமேசான் துவங்கிய நிலையில், மே மாத துவக்கத்தில் விநியோகிக்கப்படலாம்.

மற்ற பகுதிகளில் எப்போது முன்பதிவு துவங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. 3×3 MIMO தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இதில் டூயல் ஃபேண்டு,ட்ரை-ஹப் மெஸ் வைஃபை சிஸ்டம் மற்றும் தனித்துவ பிரமீடு வடிவில் உள்ளது. இதில் உள்ள சிறப்புதன்மை வாய்ந்த ஆண்டானா மூலம் வைஃபை சிக்னல்களை எந்த இடையூறும் இன்றி கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் பெற முடியும் என்றும், 5,400சதுர அடி பல அடுக்குமாடி வீடுகளில் கூட செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்கிறது அசுஸ்.

ஒரு சீராக இல்லாத கட்டிடத்தின் சூழலில் , லைரா டிரியோவின் அனைத்து மையங்களையும் ஒன்றிணைத்து ஒரு வலையமைபின் கீழ் ஒரு வைஃபை பெயரின் கீழ் கொண்டு வருகிறது. இந்த சிஸ்டம் தானாகவே பயனர்கள் அங்கும் இங்கும் நகரும் போது நல்ல சிக்னல் கிடைக்கும் ஒரு மையத்துடன் இணைப்பை ஏற்படுத்தி சிறப்பான அனுபவத்தை தருகிறது. பல்வேறு ரூட்டர்கள் அல்லது சுவிட்கள் உள்ள சிஸ்டம் அல்லது வைஃபை விரிவாக்கியை விட ஏன் ஒருவர் மெஸ் வைஃபை யை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு காரணம் இது தான். 2×2 ஐ விட 3×3 MIMO தொழில்நுட்பம் உள்ள லைரா டிரியோ அதிக அலைவரிசையை தருவதால், எவ்வளவு நெட்வொர்க் டிராப்பிக்கையும் தாங்கும்.

அசுஸ் நிறுவனம் டிரென்ட் மைக்ரோ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, இணைக்கப்பட்ட அனைத்து கருவிகளுக்கும் இடையை பாதுகாப்பான தரவு பகிர்தலை தருகிறது. மேலும் அசுஸ் வெளியிட்டுள்ள லைரா செயலியின் மூலம் இலவச கணிணி செட்அப், கெஸ்ட் வைஃபை ஷேரிங், நேர திட்டமிடல் மற்றும் நெர்வொர்க் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment