அசுரன் படத்தை முழுவதும் நான் இயக்கவில்லை! ஷாக் கொடுத்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியார், கென் கருணாஸ், அம்மு அபிராமி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், டீஜே என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு பேட்டியில்  கூறுகையில், எப்போதும் எனது படத்திற்கு நான் அனைத்து வேலைகளிலும் உடனிருந்து பார்த்துக்கொள்வேன். அதற்கான நேரம் இருந்தது.
ஆனால் அசுரனுக்கு நேரம் மிகவும் குறைவாக இருந்தது.  அதனால் வேலையினை பிரித்து கொடுத்துவிட்டேன். சில காட்சிகளை ஷூட் செய்ய இயக்குனர் மணிமாறன் படமாக்கினர். டப்பிங் முடிக்காமல் தனுஷ் லண்டன் சென்றுவிட்டதால், இயக்குனர் மாரி செல்வராஜ் லண்டன் சென்று டப்பிங் பணிகளை மேற்கொண்டார். நான் வீடியோ கால் மூலம் அதனை கவனித்து வந்தேன். இவ்வாறு அசுரன் படம் மூலம் வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.