இன்னும் 12 மணி நேரத்தில் அசுரனின் முன்னோட்டம்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன்

By Fahad | Published: Apr 02 2020 09:54 AM

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படம் வெட்கை எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கலைப்புலி.எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேறபை பெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்பட ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாலை 6.20க்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More News From vetri maran