தமிழை போல தெலுங்கு சினிமாவை மிரட்ட காத்திருக்கும் அசுரன்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் அனைவரது மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலும் கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.
தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மஞ்சு வாரியார் நடித்த ரோலில் ஸ்ரேயா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.