சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – உயர்நீதிமன்றம் தடை

நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு இடையில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி  என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில்,இந்த போராட்டம் உரிய அனுமதி பெறாமல் நடத்த உள்ளதால் ,சட்ட ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம்,நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மார்ச் 11-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக தெரிவித்தது.மேலும் மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம்.