அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் சாதனை ! முரளிதரன் சாதனை சமன்

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர்

By venu | Published: Oct 06, 2019 10:58 AM

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இந்தியா -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தற்போது தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வீரர் டி புருன்  விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி  அஸ்வின் சாதனை படைத்துள்ளார் .66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் சாதனையை சமன் செய்தார் வீரரான  அஸ்வின்.
Step2: Place in ads Display sections

unicc